பாரம்பரிய உணவுத் திருவிழா 2018-19

பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழாவும் 30.06.2018 அன்று மாலை 03.00மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு புலவர்.இரா.சஞ்சீவிராயர் அவர்கள், தலைவர்,உலகத் தமிழ் செம்மொழி பேரவை, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பாரம்பரிய உணவுத்திருவிழாவில் சிறுதானியங்களை வைத்து மாணவிகள் வித விதமாக சமைத்து இருந்தனர். பள்ளியின் தாளாளர் திரு.M. வீரதாஸ்அவர்கள் கலந்து கொண்டு, தலைமையுரையாற்றினார். மேலும் பள்ளியின் முதல்வர் திருமதி. வாலண்டினா லெஸ்லி அவர்களும்,தலைமையாசிரியர் திரு.N.மணிகண்டன் அவர்களும் கலந்து கொண்டனர். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும்நடைபெற்றன. இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவேறியது.