பண்ருட்டி ஜூன்-24 2017
சர்வதேச ஏறிபந்து போட்டியில்
சாதனை படைத்த பண்ருட்டிஜான்டூயி பள்ளி
பழைய மாணவன்வெங்கடதாசனுக்கு பாராட்டு விழா இன்று காலை நடைபெற்றது.
நேபாளம் தலை நகர்
காட் மண்டில் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி 21ம் தேதி வரை சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகIள் நடைபெற்றது.
இதில் ஏறிபந்து போட்டியில்
இந்திய ஏறிபந்துஅணி கோப்பை கைப்பற்றியது
இந்திய எறிபந்துஅணியில்இடம்பெற்ற
பண்ருட்டி ஜான்டூயி பள்ளி பழைய மாணவன் வெங்கடதாசனுக்கு ஜான் டூயி பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் பள்ளித் தாளாளர் வீரதாஸ் கலந்து கொண்டு பழைய மாணவன் வெங்கடதாசனை பாராட்டி கவுரவித்தார்
விழாவிற்கு பள்ளி முதல்வர் வாலண்டினா வெஸ்லி தலைமை வகித்தார் தலைமை ஆசிரியர் மணிகண்டன் மற்றும் சக ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்
வெங்கடதாசன் கூறியதாவது
நான் ஜான்டூயி பள்ளியில் படிக்கும் போது பண்ருட்டி அளவில் விளையாடி வந்தேன். அதன் பிறகு மாவட்ட அளவில் விளையாடி பின்னர் மாநில அளவில் விளையாடி வந்தேன். தற்போது கடந்த 15ம் தேதி முதல் சர்வதேச போட்டி நேபாளம் தலைநகர் காட்மண்டில் நடைபெற்றது இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா ஆகிய நாடுகள் மோதின,
இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது
சாதனைக்கு உதவிய தமிழ் நாடு எறிபந்து கழக பொதுசெயலாளர் திரு பால வினாயகம், கடலூர் ஏறிபந்து கழக செயலாளர் ராஜ ராஜ சோழன், பயிற்சியாளர் ஆசிக், மற்றும் எனது பெற்றோர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்